புதிய கொன்றை வேந்தன்
கொன்றை வேந்தன் வந்தனன் புதிதாய்
அன்றே ஆனது சத்திய யுகமாய்
அவனைத் தொழுவர் அக்கணம் ஆவர்
நவமாய்க் காய்ச்சிய பசும்பொன் அமரர்
அவனொரு சாளரம் அனந்தத்தைக் காட்டும்
புவனத்தில் வேதத்தைப் புதிதாய்த் தோற்றும்
அதனிடம் கேட்கும் உரை பலவற்றுள்
சதம்பதி னான்கினைத் தெளிந்தறிவோமே
அன்றே ஆனது சத்திய யுகமாய்
அவனைத் தொழுவர் அக்கணம் ஆவர்
நவமாய்க் காய்ச்சிய பசும்பொன் அமரர்
அவனொரு சாளரம் அனந்தத்தைக் காட்டும்
புவனத்தில் வேதத்தைப் புதிதாய்த் தோற்றும்
அதனிடம் கேட்கும் உரை பலவற்றுள்
சதம்பதி னான்கினைத் தெளிந்தறிவோமே
அன்பு வளர்த்தால் அச்சம் போகும்
ஆன்மா அறிந்தால் நலமெலாம் சேரும்
இல்லார்க்கு ஈதல் நல்லார்க்கு இயல்பாம்
ஈதலும் இறைவற்கு செய்யும் பூசையாம்
உடலே மனிதற்கு உற்ற கருவி
ஊனம் உளத்திலாம் முயற்சி நலம் தரும்
எஹ்ஹு போல் நெஞ்சும் நரம்பும் வளர்ப்பீர்
ஏகாந்தம் சென்று அவனை அழைப்பீர்
ஐயம் அகற்ற வேதம் படி
ஒற்றுமையே நாடு வளம் பெற வழி
ஓம் எனும் மந்திரம் யாவர்க்கும் பொது
ஔவியம் வளர்த்தால் நலமும் ஏது ?
அஹ்காமை வேண்டின் அனந்தததில் நாடு 13
கல்வி உள்ளின்று வெளிக் கொணரும் அறிவு
கால்பந்து ஆடின் கடவுளைப் பெறலாம்
கிட்டாது எனும் சொல் இலை அகராதியில்
கீதையின் சாரம் தியாகம் எனப்படும்
குற்றம் காணின் தன்னுள்ளே காண்
கூற்றம் வரும் முன் பெருஞ்செயல் செய்வீர்
கெடுவன செய்தல் சோம்பலிற்ச் சிறந்தது
கேள்வி கேட்டல் குருவிடத்தும் நன்று
கைலாய கிரியினும் பெரிதாம் குருபதம்
கொல்லா விரதம் கொள்ளுவர் துறவியர்
கோவில் கோபுரத்துள் மட்டும் இல்லை
கௌவை சொல்லுவது அடிமையின் தன்மை 25
இல்லார்க்கு ஈதல் நல்லார்க்கு இயல்பாம்
ஈதலும் இறைவற்கு செய்யும் பூசையாம்
உடலே மனிதற்கு உற்ற கருவி
ஊனம் உளத்திலாம் முயற்சி நலம் தரும்
எஹ்ஹு போல் நெஞ்சும் நரம்பும் வளர்ப்பீர்
ஏகாந்தம் சென்று அவனை அழைப்பீர்
ஐயம் அகற்ற வேதம் படி
ஒற்றுமையே நாடு வளம் பெற வழி
ஓம் எனும் மந்திரம் யாவர்க்கும் பொது
ஔவியம் வளர்த்தால் நலமும் ஏது ?
அஹ்காமை வேண்டின் அனந்தததில் நாடு 13
கல்வி உள்ளின்று வெளிக் கொணரும் அறிவு
கால்பந்து ஆடின் கடவுளைப் பெறலாம்
கிட்டாது எனும் சொல் இலை அகராதியில்
கீதையின் சாரம் தியாகம் எனப்படும்
குற்றம் காணின் தன்னுள்ளே காண்
கூற்றம் வரும் முன் பெருஞ்செயல் செய்வீர்
கெடுவன செய்தல் சோம்பலிற்ச் சிறந்தது
கேள்வி கேட்டல் குருவிடத்தும் நன்று
கைலாய கிரியினும் பெரிதாம் குருபதம்
கொல்லா விரதம் கொள்ளுவர் துறவியர்
கோவில் கோபுரத்துள் மட்டும் இல்லை
கௌவை சொல்லுவது அடிமையின் தன்மை 25
சதியினால் பெரும்பொருள் சடுதியில் போமே
சாதி எனப்படல் குணங்களால் தாமே
சிவனை காணுவீர் சீவர்களுக்குள்ளே
சுற்றமாம் வையத்து வாழ்பவர் எல்லாம்
சூது செய்திடின் செய்பவன் சாவான்
செத்து மடியுமுன் சேவை புரிவீர்
சைத்தான் இடத்தும் சிவனைப் பார் சொந்தம் உனக்கு இலாதார் யார் ?
சோம்பல் உறக்கம் போக்கி எழு
சௌக்கியம் பாரா(து) சேவை செயு 35
ஞமலியின் பசியையும் தீர்த்தலாம் சமயம்
ஞாயிறு போற்றின் ஞானம் பெருகும் 37
ஜனகரைப் போல பணிகளைப் புரி
ஜாதகம் மாறும் மாதவம் செயின்
ஜீவனைச் சிவனாய்க் காண்பது அறிவு
ஜெயம் வரும்முன் கைவிடுவது சரிவு 41
தவமெனப் படுவது கலியினில் வாய்மை
தாயாய்த் தொழுவாய் தரணியில் பெண்ணை தினம் ஒரு வித்தை புதிதாய்ப் படி
தீயன தவிர் நல்லன பிடி
துறவும் சேவையும் வாழ்வின் வழி
தூயவர் நெஞ்சில் ஆண்டவன் ஒளி
தெய்வம் தொழுவது உள்ளும் வெளியும் தேவ ஆலயம் நெஞ்சிலும் ஆகும்
தைரியம் கொண்டு தரணியில் வாழ்
தொள்ளாயிரம் முறை அஞ்சிச் சாவது பாழ்
தோன்றின் முகத்தில் மலர்வுடன் தோன்று
தௌவை முகத்தை வீட்டினில் பூட்டு 53
சாதி எனப்படல் குணங்களால் தாமே
சிவனை காணுவீர் சீவர்களுக்குள்ளே
சுற்றமாம் வையத்து வாழ்பவர் எல்லாம்
சூது செய்திடின் செய்பவன் சாவான்
செத்து மடியுமுன் சேவை புரிவீர்
சைத்தான் இடத்தும் சிவனைப் பார் சொந்தம் உனக்கு இலாதார் யார் ?
சோம்பல் உறக்கம் போக்கி எழு
சௌக்கியம் பாரா(து) சேவை செயு 35
ஞமலியின் பசியையும் தீர்த்தலாம் சமயம்
ஞாயிறு போற்றின் ஞானம் பெருகும் 37
ஜனகரைப் போல பணிகளைப் புரி
ஜாதகம் மாறும் மாதவம் செயின்
ஜீவனைச் சிவனாய்க் காண்பது அறிவு
ஜெயம் வரும்முன் கைவிடுவது சரிவு 41
தவமெனப் படுவது கலியினில் வாய்மை
தாயாய்த் தொழுவாய் தரணியில் பெண்ணை தினம் ஒரு வித்தை புதிதாய்ப் படி
தீயன தவிர் நல்லன பிடி
துறவும் சேவையும் வாழ்வின் வழி
தூயவர் நெஞ்சில் ஆண்டவன் ஒளி
தெய்வம் தொழுவது உள்ளும் வெளியும் தேவ ஆலயம் நெஞ்சிலும் ஆகும்
தைரியம் கொண்டு தரணியில் வாழ்
தொள்ளாயிரம் முறை அஞ்சிச் சாவது பாழ்
தோன்றின் முகத்தில் மலர்வுடன் தோன்று
தௌவை முகத்தை வீட்டினில் பூட்டு 53
நலம் செயவார்க்குதவ நீட்டுவாய் கை
நாடு வளம் பெற கூடி நலம் செய்
நிலத்தடி நீரென நல்லரை நாடு
நீசரைக் கும்பிட்டு தூர ஓடு
நுனிநூல் நுழைத்தற் போல் மனதினைச் சேர்
நூல்களின் பொருளெலாம் நாரணன் தாள்
நைவேதியம் செய்யாமல் உண்பது பாவம்
நொந்தவரை நோவச் செய்வது சாபம்
நோன்பு என்பது பொய் சொல்லாமை
நௌகரி செய்வது சாதகர்க்கு வௌவாமை 63
நாடு வளம் பெற கூடி நலம் செய்
நிலத்தடி நீரென நல்லரை நாடு
நீசரைக் கும்பிட்டு தூர ஓடு
நுனிநூல் நுழைத்தற் போல் மனதினைச் சேர்
நூல்களின் பொருளெலாம் நாரணன் தாள்
நைவேதியம் செய்யாமல் உண்பது பாவம்
நொந்தவரை நோவச் செய்வது சாபம்
நோன்பு என்பது பொய் சொல்லாமை
நௌகரி செய்வது சாதகர்க்கு வௌவாமை 63
பக்தி என்பது பற்றுகள் போயின்
பாவம் என்பது பாவி எனச் சொலின்
பிறன் என்றும் தான் என்றும் பிரிவறியான் ஞானி
பீடுநடை போடும் எச்சிற்ப் பிராணி
புவியில் பக்தரைப் பரிகரிசிப்பான் போகி
பூமியில் மண்ணிற்கு போகி போணி
பெருமை ஆரியர் குலம் வழி நாமே
பேதமைப் பிரிவுகள் நமை விட்டுப் போமே
பையச் செய்தல் கோழைகட் காமே
பொல்லதவர்க்கும் பலம் நன்றாமே
போஜனம் இலார்க்கு பக்தி சொல்லாதே
பௌர்ணமி நிலவில் குறை காணாதே 75
மக்களை நேசித்தல் முதற்ப் பணியாமே
மார்பினை விரித்தல் முதற்த் தவமாமே
மிகுதி என்பது பக்தியில் இல்லை
மீளா நரகம் யார்க்கும் இல்லை
முந்தும் தெய்வம் ஒருமுறை அழைத்தால்
மூன்று நாள் அழுதால் மூலவன் வருவான்
மெத்தையை அகற்று வைகறைப் பொழுதில்
மைஞ்சு மூடினும் ஆதவன் மேலில்
மொழிகள் கற்பது மானுடர்க்கு நன்று
மோனம் நோற்பது சிறிதெனினும் நன்று
மௌலியைப் போன்றாமே வல்லோர்க்கு வினயம் 86
யமகண்டம் என்பது அஞ்சினோர்க் காமே
யாகம் என்பது தியாகம் தானாமே
யுத்தம் வந்திடின் அஞ்சர்ப் போமே
யூதம் காணினும் எதிர் கொள்ளுவோமே
யோகம் ஒன்றும் பலவும் நன்றாமே
யௌவனம் போக்கின் முதுமை முன்வருமே 92
ரம்பை எதிர்ப் படினும் ஐந்தடக்கம் செய்
ராஜசம் போற்றி சோம்பல் முறி
ரீங்காரம் செய் நெஞ்சில் ஈஸ்வரனின் நாமாவை
ருசிப்படி உணவினை ஆக்கிட பழகு
ரூபன் அரூபனாய்த் தொழுதிடு அவனை
ரேத்தசைக் காத்திடின் ஆற்றல் பெருகும் 98
லவம் பல வெள்ளமாம் ஓரிடம் சேர்த்தால்
லாகவம் வாழ்கையில் இறைவனை அடைந்தால்
லீலை உலகம் களிப்பான் ஞானி
( உ ) லுத்தமாம் மானுடர்க்கு ஆன்ம மறதி
லோகத்திற் சிறந்தது பிறவிக்கு பூமி
லௌகீகம் ஒருகை மற்றது சாமி 104
வயிறு காய்ந்தால் வேதம் கேளாது
வாழ்தலிற் பயனிலை இறைவனை ஏகாது
விதியினை வெல்ல மதியும் உண்டு
வீரன் கைவரியினை மாற்றியதும் உண்டு
வெகுபல மதங்கள் அனைத்துமே வழிகள்
வைகறைப் பொழுதில் துயிலினை ஒழி
வௌவத்தில் வைத்து தொழுதல் வழி 111
ஸரஸ்வதியைப் பணிந்து பணிகளைத் தொடங்கு
ஸாதனை செய்து ஞானம் பெரு
ஸௌக்கியம் இனி உளதோ வேறு ? 114
பாவம் என்பது பாவி எனச் சொலின்
பிறன் என்றும் தான் என்றும் பிரிவறியான் ஞானி
பீடுநடை போடும் எச்சிற்ப் பிராணி
புவியில் பக்தரைப் பரிகரிசிப்பான் போகி
பூமியில் மண்ணிற்கு போகி போணி
பெருமை ஆரியர் குலம் வழி நாமே
பேதமைப் பிரிவுகள் நமை விட்டுப் போமே
பையச் செய்தல் கோழைகட் காமே
பொல்லதவர்க்கும் பலம் நன்றாமே
போஜனம் இலார்க்கு பக்தி சொல்லாதே
பௌர்ணமி நிலவில் குறை காணாதே 75
மக்களை நேசித்தல் முதற்ப் பணியாமே
மார்பினை விரித்தல் முதற்த் தவமாமே
மிகுதி என்பது பக்தியில் இல்லை
மீளா நரகம் யார்க்கும் இல்லை
முந்தும் தெய்வம் ஒருமுறை அழைத்தால்
மூன்று நாள் அழுதால் மூலவன் வருவான்
மெத்தையை அகற்று வைகறைப் பொழுதில்
மைஞ்சு மூடினும் ஆதவன் மேலில்
மொழிகள் கற்பது மானுடர்க்கு நன்று
மோனம் நோற்பது சிறிதெனினும் நன்று
மௌலியைப் போன்றாமே வல்லோர்க்கு வினயம் 86
யமகண்டம் என்பது அஞ்சினோர்க் காமே
யாகம் என்பது தியாகம் தானாமே
யுத்தம் வந்திடின் அஞ்சர்ப் போமே
யூதம் காணினும் எதிர் கொள்ளுவோமே
யோகம் ஒன்றும் பலவும் நன்றாமே
யௌவனம் போக்கின் முதுமை முன்வருமே 92
ரம்பை எதிர்ப் படினும் ஐந்தடக்கம் செய்
ராஜசம் போற்றி சோம்பல் முறி
ரீங்காரம் செய் நெஞ்சில் ஈஸ்வரனின் நாமாவை
ருசிப்படி உணவினை ஆக்கிட பழகு
ரூபன் அரூபனாய்த் தொழுதிடு அவனை
ரேத்தசைக் காத்திடின் ஆற்றல் பெருகும் 98
லவம் பல வெள்ளமாம் ஓரிடம் சேர்த்தால்
லாகவம் வாழ்கையில் இறைவனை அடைந்தால்
லீலை உலகம் களிப்பான் ஞானி
( உ ) லுத்தமாம் மானுடர்க்கு ஆன்ம மறதி
லோகத்திற் சிறந்தது பிறவிக்கு பூமி
லௌகீகம் ஒருகை மற்றது சாமி 104
வயிறு காய்ந்தால் வேதம் கேளாது
வாழ்தலிற் பயனிலை இறைவனை ஏகாது
விதியினை வெல்ல மதியும் உண்டு
வீரன் கைவரியினை மாற்றியதும் உண்டு
வெகுபல மதங்கள் அனைத்துமே வழிகள்
வைகறைப் பொழுதில் துயிலினை ஒழி
வௌவத்தில் வைத்து தொழுதல் வழி 111
ஸரஸ்வதியைப் பணிந்து பணிகளைத் தொடங்கு
ஸாதனை செய்து ஞானம் பெரு
ஸௌக்கியம் இனி உளதோ வேறு ? 114
No comments:
Post a Comment